" "" "

தனது கள்ளக் காதலனுக்கு 15 வயது மகளை பாலியல் விருந்தாக்கிய தாய்.! இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகள்.!!

இந்தியாவில் 36 வயது பெண் ஒருவரின் கள்ளக் காதலால் அவரது மகள் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவர் சுமித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகளும் 10 வயதில் மகனும் உள்ளனர்.

யாதவ் வெளி மாநிலங்களுக்கு வியாபார விசயமாக செல்வதால் அவரது உறவுக்கார இளைஞர் ஒருவரை குடும்பத்தினருக்கு உதவு தேவைபட்டால் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் சுமித்ராவிற்கு பொருட்கள் வாங்கி கொடுப்பது வெளியே அழைத்துச் செல்வது போன்றவற்றிக்காக அடிக்கடி யாதவ் வீட்டிற்கு சென்றுள்ளார் குறித்த இளைஞர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் சுமித்ராவிற்கு வீட்டிற்கு வந்து செல்லும் இளைஞன் மீது காதல் வந்துள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை சுமித்ராவின் மகள் கண்டதால் மகளையும் குறித்த இளைஞருக்கு உணவாக்கி உள்ளார் சுமித்ரா. இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வாந்தி மற்றும் மயக்கம் வருவதை அவதானித்த அயலவர்கள் சந்தேகத்தின் பேரில் சிறுவர் நல அமைப்பிற்கு கூறியதை தொடர்ந்து,

வைத்தியர்களுடன் வந்த சிறுவர் நல அமைப்பினர் பரிசோதனை செய்ததில் சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவர் நல அமைப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் சிறுமியின் தாய் மற்றும் கள்ளக் காதலன் கைது செய்யப் பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது..!