இன்றைய ராசி பலன்! 24.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

24.03.2020 பங்குனி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும். அமாவாசை பின் பகல் 3.27 வரை உத்தரட்டாதி பின் இரவு 4.31 வரையாகும். சுப நேரம் காலை 10.45 – 12.15 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.15 – 4.45 வரையாகும். எமகண்டம் காலை 9.15 – 10.45 வரையாகும். குளிகன் மதியம் 12.15 – 1.45 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              தம்பதியினருக்கு இடையில் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிர்பார்த்த காரியம் விரைவில் முடியும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். பழைய கடனில் ஒரு பாதி அடைப்படும். இன்றைய நாள் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                   நீங்கள் திட்டமிட்ட காரியங்கள்கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைக ளால் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங் கள் மதிக்கப்படுவீர்கள். நட்பு வகையில் நன்மைகள் உண்டு. வெளியில் கேட்ட பணம் உதவி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றியாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புது முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சு மங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் நல்ல அனுகூலம் ஏற்படும். புதிய நண்பர்கள் மூலம் லாபமும், ஆதாயமும் உண்டு. பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். இன்றைய நாள் . தடைகள் ஏற்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். குடும்பத்தில் ஆனந்தம் கூடும். வாழ்க்கை தரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். இன்றைய நாள் எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாளாகும்.  

துலாராசி உறவுகளே:             குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். மனதில் நினைத்த காரியம் எளிதில் கைகூடும் இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்க லில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                நீங்கள் தடைகளை கண்டு தளர மாட்டார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாழ்க்கைத்துணையால் நல்ல அனுகூலம் ஏற்படும் இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                   உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமைகள் நிலவும். வரும் எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். எதிரிகளின் பலம் குறையும். இன்றைய நாள் . நினைத் ததை முடிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              உங்கள் ராசியில் சந்திரன் நீடிப் பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை குறை கூறுவார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். மனநிம்மதிக்காக தினமும் ஆலயம் சென்று வழிப்படவும். அண்டை அயலாரிடம் கவனமுடன் இருப்பது நல்லது. இன்றைய நாள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாளாகும்.