" "" "

இன்றைய ராசி பலன் – 04.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 04-07-2020, ஆனி 20, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.34 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் இரவு 11.22 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கோகிலா விரதம். பௌர்ணமி. குரு பூர்ணிமா. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மேஷ ராசி நேயர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

சந்திராஷ்டமம் தொடர்வதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும்.பண நெருக்கடிகளை சமாளிக்க எந்த விஷயத்திலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள்.

மிதுன ராசி காரர்களே:

புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடக ராசி நேயர்களே:

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே:

குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை.உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும்.

கன்னி ராசி காரர்களே:

மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். பிள்ளைகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்.பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

துலாராசி உறவுகளே:

தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

விருச்சிக ராசி நேயர்களே:

சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் நாள்.

மகர ராசி காரர்களே:

தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:

ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும்.

மீன ராசி நேயர்களே:

வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.ள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.