" "" "

பெண்களுடன் தகாத உறவு, ஆபாச வீடியோ, கன்னியாகுமரி காசியை காப்பாற்ற முயற்சிக்கும் அவரது தங்கை. வீடியோ வெளியிட்டு அதிரடி..!!

துப்பாக்கி கொண்டு செல்லாத சிபிசிஐடியினர் தங்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் “சாத்தான்குளத்தில் நடந்தது போல் நடக்கும்” என்று மிரட்டியதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை கன்னியாகுமரி காசியின் சகோதரி வெளியிட்டுள்ளார்.தன்னை பெரிய தொழிலதிபராக முகப் புத்தகத்தில் காட்டிக் கொண்ட காசி அழகிய பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன் அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து கைது செய்யப் பட்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவரது மொபைலில் இருந்து பல இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மீட்கப் பட்டது. காதலிப்பாக கூறி பெண்களுடன் தகாத உறவில் இருக்கும் காசி அவை அனைத்தையும் வீடியோ எடுத்து தனது லாப் டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கில் போட்டு விடுவார். விசாரணையில் இதனை ஒத்துக் கொண்டதால் அவரது லாப் டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கை பொலீஸார் தேடிச் சென்றனர்.

இதன் போது ஹார்ட் டிஸ்க் சேதப் படுத்தப் பட்டுள்ளதுடன் லாப் டாப்பில் இருந்து வீடியோக்கள் அழிக்க முயற்சி செய்யப் பட்டுள்ளது. இதனை காசியின் தந்தை தங்கப் பாண்டியன் செய்திருந்ததாக சிபிசிஐடியினரால் கைது செய்யப் பட்டார். கோழி பண்ணை வைத்திருந்த தங்க பாண்டியன் திடீரென கோடீஸ்வரனானார். மகன் பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் பெற்றதால் மகனுக்கு உடந்தையாக தந்தையே இருந்துள்ளார் என தெரியவந்தது.

தற்போது தந்தை சிபிசிஐடியினரால் கைது செய்யப் பட்ட நிலையில் காசியின் சகோதரி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த புகார் குறித்து சிபிசிஐடியினர் தெரிவிக்கையில் நாம் எப்போதும் துப்பாக்கி கொண்டு சொல்வது என்பது அனைவரும் அறிந்ததே. காசியின் வீட்டிற்கு நாம் தனியாக செல்லவில்லை,விஏஒ வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தான் போனோம்,

இது முற்றிலும் பொய்யான குற்றச் சாட்டாகும். அவர்கள் வீட்டில் யாருக்கும் தாக்கவோ, அல்லது கடும் சொற்கள் கூட பயன்படுத்தவில்லை, சகோதரனின் குற்றங்களை ஒரு பெண்ணாக அவரது தங்கச்சி மறைக்க முற்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்..!!