" "" "

இன்றைய ராசி பலன் – 05.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 05-02-2021, தை 23, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.07 வரை பின்பு தேய்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் மாலை 06.28 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பகல் 12.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உடல் ஆரோக் கியம் மேம்படும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

உறவினர்கள் அன்புத் தொல்லை குறையும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும்.திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:

நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

சிம்ம ராசி அன்பர்களே:

சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும்.பிள் ளைகளால் பெருமை உண்டாகும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.

கன்னி ராசி காரர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.சொந்தபந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது.மகளுக்கு நல்ல வரன் அமையும்.

துலாராசி உறவுகளே:

மன குழப்பங்கள் சற்று குறையும்.பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம்.பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.சேமிப்பு குறையும்.

விருச்சிக ராசி நேயர்களே:

மன நிம்மதி குறையும். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள்.உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அண்டை அயலாரின் சில எரிச்சல், கோபம் அடையலாம்.

மகர ராசி காரர்களே:

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் விலகும்.அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி உறவுகளே:

திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு பகல் 12.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். சகோதரர்களால் சில சங்கடங் கள் ஏற்படும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.