" "" "

இன்றைய ராசி பலன் – 13.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 13-01-2021, மார்கழி 29, புதன்கிழமை, அமாவாசை திதி பகல் 10.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 05.28 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பின்இரவு 05.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. போகிப் பண்டிகை.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிரபலங்கள் உதவுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும்.தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு பகல் 12.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

ராசிக்கு பகல் 12.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

கடக ராசி நேயர்களே:

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும்.சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

தாயாரின் உடல் நிலை சீராகும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

கன்னி ராசி காரர்களே:

தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும்.நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

துலாராசி உறவுகளே:

பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

வீண் செலவுகள் அதிகரிக்கும்.மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். சொந்த பந்தங்களின் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்.உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:

விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

மகர ராசி காரர்களே:

வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.புது வாகனம் வாங்குவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

திடீர் பயணங்கள் இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும்.சகோதர வகையில் அலைச்சல் உண்டு. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்

மீன ராசி நேயர்களே:

உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். சிலருக்கு நண்பர்கள் வீட்டில் எளிய முறையில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டும் வாய்ப்பு ஏற்படும்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும்.