" "" "

இன்றைய ராசி பலன் – 16.01.2021

இன்றைய பஞ்சாங்கம், 16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சதுர்த்தி விரதம். கரி நாள். காணும் பொங்கல்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும்.

ரிஷப ராசி அன்பர்களே:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உங்களை நம்பி சிலர் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மிதுன ராசி காரர்களே:

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வண்டி வாகனங்களால் வீண் விரையங்கள் ஏற்படும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

கடக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும்.சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும். பணம்நகையை கவனமாக கையாளுங்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மனைவி வழியில் ஒற்றுமை பிறக்கும்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். சிலருக்குக் குடும்பத்துடன் அருகிலுள்ள கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே:

மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.

மகர ராசி காரர்களே:

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:

ற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீன ராசி நேயர்களே:

மனைவி வழியில் ஒற்றுமை பிறக்கும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.யாரையும் விமர்சிக்க வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.எவ்வளவோ பணம்வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.