" "" "

இன்றைய ராசி பலன் – 20.11.2020

இன்றைய பஞ்சாங்கம்,20-11-2020, கார்த்திகை 05, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.30 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.22 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.22 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். சூரசம்ஹாரம். முருக வழிபாடு நல்லது. திருக்கணிதப்படி குரு பெயர்ச்சி பகல் 01.23 மணிக்கு.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

ரிஷபம் உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தில் அமைதி திரும்பும்.

மிதுனம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கில்லை.

கடகம் குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.கொடுத்த கடன்கள் வசூலாகும். சகோதரர்களில் அரவணைப்பு அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.

சிம்மம் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் .பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும்.

கன்னி மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும்.உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார்.

துலாம் தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்.

விருச்சிகம் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

தனுசு செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.நீண்ட நாள்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்த பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.

மகரம் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.யாரை நம்புவது என்கிற கோபத்திற்கு ஆளாவீர்கள்.காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும்.கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் இருந்த மன கவலைகள் மறைந்து நிம்மதி ஏற்படும்.

கும்பம் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.எவ்வளவு பணம் வந் தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும். அவருடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம்.

மீனம்

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.சிலருக்கு நண்பர்கள் வீட்டில் எளிய முறையில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள் ளும் வாய்ப்பு ஏற்படும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.எவ்வளவு பணம் வந் தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.