" "" "

“உயிர் ஆபத்தில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்” வனிதாவின் தந்தை விஜயகுமார் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்.!

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பலியாகும் மக்கள் மற்றும் மிருகங்களின் உயிரை காப்பாற்றுமாறு தமிழக முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் எழுதிய கடிதம் தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

வனிதாவின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் அவர்கள் தமிழ் சினிமாவில் 50 வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். வனிதாவால் பல அவமானங்களை சந்தித்த விஜயகுமார் தற்போது வனிதாவை தன் மகள் இல்லை என கூறுவிட்டு வாழ்ந்து வருகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட விஜயகுமார் சமுக சேவைகளையும் செய்து வருகிறார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அந்த வகையில் அண்மையில் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் “சென்னை மாநகராட்சி, ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக வசித்து வருகின்றேன். இங்கு நான் மட்டும் இன்றி பல நூறு குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சென்னையை அண்டிய பகுதியில் பெய்துவரும் மழையால் செங்கரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் சுமார் 21 அடியாக உயர்ந்துள்ளது, இன்னும் உயர்ந்து வருகிறது. இது போல் 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப் பட்டது.

இதனால் பல வீடுகள் உடைந்துவிழுந்து சேதமடைந்தது, அத்துடன் உயிர் பலிகளும் ஆனது, இம்முறையும் அது போல் ஒரு சம்பவம் நடந்தால் இழப்பு அதிகமாக இருக்கும், அதனால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம், தயவு செய்து இதனை ஆராய்ந்து அளவுடன் ஏரியை திறக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார், இதனால் உயிர் மற்றும் உடமை சேதங்கள் குறையும் என தெரிவித்துள்ளார்.!!