இந்தியாவின் கொடி எது என்று கூட தெரியாத குஷ்பு.! வேறு நாட்டின் கொடியை பதிவிட்டு இந்திய குடியரசு தினத்திற்கு வாழ்த்து சொன்ன கொடுமை..! இதோ வைரலாகும் பதிவு.!!
தேசிய கொடி கூட தெரியாமல் ஏன் அரசியல் செய்கிறீர்கள் என பலரும் நடிகை குஷ்புவை திட்டி தீர்த்து வருகின்றனர்.நேற்று இந்தியாவின் குடியரசு தினமாகும், இந்த தினத்தில் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
நடிகை குஷ்புவும் வழமை போல் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்தை தெரிவித்திருந்தார். ஆனால் இதனை பார்த்த அனைவரும் குஷ்புவை திட்டி தீர்த்தனர் காரணம் இமோஜியில் இந்திய கொடிக்கு பதிலாக ஆப்ரிக்காவின் niger நாட்டின் கொடியை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் கொடி கூட தெரியாமல் அரசியல் செய்யும் உங்களால் தான் நாட்டுக்கும் வீட்டிக்கும் கேடு என பலரும் திட்டி தீர்த்து வரும் நிலையில், “கண்ணாடி அணியாமல் பதிவு போட்டதால் தான் கொடி மாறி விட்டதாகவும், இந்த தவறுக்காக அனைவரும் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் கூறியுள்ள குஷ்பு இனி இது போன்ற தவறுகள் நடக்காது என கூறியுள்ளார். எது எப்படி போனாலும் குஷ்புவை நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.!!