" "" "

கொடூர தாண்டவம் ஆடும் நோய்களை நொடியில் தீர்க்கும் ஏலக்காய் மற்றும் நெல்லி, படித்து நண்பர்களுடன் பகிருங்கள். ..!

என்ன தான் ஆங்கில மருந்தின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருந்தாலும் வீட்டில் இருக்கும் சிறிய இஞ்சி, ஏலக்காய், கருஞ்சீரகம் போன்றவற்றிற்கு ஈடாகுவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக சில பொருட்கள் இருக்க வேண்டும் என பாட்டிகள் கூறுவதுண்டு. அதில் பூண்டு, சுக்கு, தேன், மற்றும் மேல் குறிப்பிட்டவை முதலிடம் பிடிக்கிறது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இன்று நாம் பார்க்கப் போவது வீட்டில் செய்யக் கூடிய சில மருத்துவங்கள் தான். ஏலக்காயை நன்றாக தூளாக்கி அரைத்து தேன் கலந்து மிளகு அளவில் உருண்டை செய்து ஒரு நாளைக்கு ஒன்று வீதம் சாப்பிட்டு வர கண் பார்வை அதிகரிப்பதுடன் உடலில் இருந்த சோர்வு இல்லாமல் போய்விடும்.

அடுத்து ஏலக்காய், சிறிய இஞ்சி துண்டு, இரண்டையும் நன்றாக அரைத்து வெற்றிலையில் தடவி நெற்றியில் பத்துபோட்டால் மண்டை சளி, தலை வலி போன்றவை குறைந்துவிடும். ஏலக்காய், மிளகு, சுக்கு சேர்த்து ஒன்று இரண்டாக தட்டி ஒரு கப் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடித்து கலையில் குடித்து வர தொண்டை வலி, இருமல், மூக்கடைப்பு போன்றவை உடனடியாக குணமாகி விடும்.

தற்போது எங்கு பார்த்தாலும் வைரஸ் தொற்றுக்கள் தான்… இதில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க தினமும் இரண்டு அல்லது மூன்று நெல்லி சாப்பிட்டு வர வேண்டும். கொய்யாப் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதும் நோய்கள் வராமல் தடுக்கிறது..என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்பு பிடித்திருக்கா.? அப்பிடீன்னா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!