ஒட்டாவா பகுதியில் கடுமையான வெப்பம்…!! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசாங்கம்..!!!
கனடாவில் ஒட்டாவா பகுதியில் கடுமையான வெப்பம் அதிகரித்து வருவதால் அந்த பகுதியிலுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி ஒட்டாவா பொது சுகாதாரம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் இந்த வெப்பம் ஒட்டாவா பகுதியில் 32.3 செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெப்ப நிலை ஒட்டாவா – கட்டினோ, ப்ரோக்வில் – லீட்ஸ் மற்றும் கிரென்வில்லி, பிரெஸ்காட்- ரஸ்ஸல் மற்றும் கார்ன்வால் – மோரிஸ்பர்க் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த இடத்தில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் இந்த வெப்பத்திற்கு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் குளிரான பகுதியை நாடி தங்களின் உடல் நிலையை திடமாக வைத்துக் கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.