" "" "

ஒரே நேரத்தில் தோன்றிய இரண்டு நிலாக்கள்.! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஆராய்ச்சியாளர்கள். ! வைரலாகும் வீடியோ இதோ..!!

இரண்டு நிலவுகள் ஒரே நேரத்தில் தோன்றியதாக மக்கள் சந்தோஷத்தில் வீடியோ எடுத்து வைரலாக்கிய சம்பவம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி பல தகவல்களை வெளியிட்டு வருகிறது ஐக்கிய அரபு அமீரகம்.

இதன் ஒரு பகுதியாக செய்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் UAE Government அனுப்பியுள்ள விண்கலம் ஒன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி பற்றியும், இதன் வெற்றி பற்றியும் மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய துபாய் அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் போது 100M உயரம் கொண்ட இரண்டு மிகப்பெரிய கிரேன் மூலம் 40 மீட்டர் திரை ஒன்றை நிறுத்தியுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதில் செவ்வாய் கிரகத்தில் உள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அத்துடன் இந்த நிலவின் பிம்பம் துபாய் அரசினால் நிறுவப்பட்ட திரை மூலம் அல்குத்ரா பாலைவனத்தின் வானில் தெரிய தொடங்கியது. இவை இரண்டு அழகிய நிலாக்கள் போல் தோன்றியது,

இதனை பார்த்த மக்கள் இரண்டு நிலாக்கள் என துள்ளி குதித்த நிலையில் வீடியோவும் எடுத்துக் கொண்டனர். உண்மை தன்மையையும் அரசின் கடின முயற்சியையும் பாராட்டியதுடன் துபாய் அரசின் ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.!!