" "" "

தவறான தொழில் செய்துவந்த திருநங்கை திடீர் மரணம்..! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!!

அண்மை காலங்களில் திரு நங்கைகளின் மரணங்கள் அதிகரித்து வருகின்றது. தங்கள் சுய லாபத்திற்காக திருநங்கைகளை காதலித்து ஏமாற்றும் நபர்கள் அதிகரித்து வருகின்றதால் இந்த மரணங்கள் நிகழ்வதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் நேற்றைய தினம் 19 வயதான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த சபீனா என்கிற திருநங்கையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சபீனா நுங்கம்பாக்கத்தில் தவறான தொழில் செய்து வந்துள்ளார், சம்பவ தினத்தன்று கஷ்டமரை சந்திக்க தனது இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சபீனா சென்றுள்ளார்.

வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இருந்த பொலீஸார் இவர்களின் வாகனத்தை மறித்ததுடன் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் சபீனாவும் அவரது தோழியும் பொலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் வளையல்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அபராதம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொண்டனர். இருப்பினும் கஷ்டமரை சந்திக்க முடியாததால் சபீனா கத்தி கூச்சலிட்டுள்ளார். பின் நேராக சென்று அவரது சில ஆண் நண்பர்களை சந்தித்துள்ளார். அவர்களுடனும் முரண்பட்டுக் கொண்ட சபீனா நேராக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்..!!