" "" "

15 வயது சிறுமிக்கு கை கால்களை கட்டிப் போட்டு பெற்றோர் செய்த கொடுமையான செயல்..! பொலீஸ் விசாரணைகள் சிக்கிய சிறுமிகள்…!!

ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தடுக்க முடியாத ஒன்றாக இருப்பது குழந்தை திருமணங்கள் தான். 10 வயதை பெண் குழந்தைகள் கடந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அன்று தான் அப்படி என்றால் இன்றைய காலத்திலும் 10 வயதை கடந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அண்மையில் சமூக நலத்துறை அதிகாரிகளால் 4 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 15 வயதான மாணவி, ராணிபேட்டையை சேர்ந்த 17 வயது மாணவி, கார்ணாம்பட்டுவை சேர்ந்த 16 மாணவி, அத்துடன் சோளிங்கர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி என கிடைத்த தகவலுக்கமைய களத்தில் இறங்கிய சமூக நலத்துறையினர் குழந்தைகளை மீட்டுள்ளனர். இந்த நிலையில் 15 வயது சிறுமி ஒருவர் பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

காட்பாடியை சேர்ந்த குறித்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளும் படி பெற்றோர் வற்புறுத்திய நிலையில் சிறுமி மறுத்ததால் பாட்டி வீட்டில் நிற்கும் படி கூறியுள்ளனர். பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு இரவு 11 மணிக்கு பெற்றோர் மணமகனுடன் வந்து தாலி கட்டியுள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கை கால்களை கட்டிய பெற்றோர் துடிக்க துடிக்க தாலி கட்டும் படி மணமகனுக்கு கூறியுள்ளனர். தாலி கட்டு முடிந்ததும் கை கால்களை கழட்டி விட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்து தப்பிய சிறுமி விருத்தம்பட்டு பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..!!