சிங்கப்பூரில் நடைபாதைகளில் மின் ஸ்கூட்டர் ஒட்டிய நபருக்கு அபராதம்..!!!

சிங்கப்பூரில் நடைபாதைகளில் புல்தரையில் மின் ஸ்கூட்டரைச் செலுத்திய நபருக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் செலுத்தப்படலாம். நடைபாதைகளில் மின் ஸ்கூட்டர்களைச் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நினைவூட்டல் வந்துள்ளது. CNA கேட்ட கேள்விக்கு பதிலளித்து தேசியப் பூங்காக் கழகம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களை, அனுமதி இன்றி புல்தரை மீது ஓட்டிச் செல்வது, பூங்காக்கள்-மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதைக் கழகம் சுட்டிக் காட்டியுள்ளது. புல்தரை மீது மின்ஸ்கூட்டர்களை ஓட்டிச் செல்வதால் அது பாதிப்புக்குள்ளாகும். பின்னர் அதனால், மண் அரிப்பு ஏற்படும். மேலும் மேடுபள்ளமான புல்தரை, வாகனங்களை ஓட்டிச் செல்லப் பாதுகாப்பான அல்ல என்று கழக அதிகாரி கூறியுள்ளார்.

நடைபாதைகளைத் தவிர்க்கும் வகையில் சிலர், மின்ஸ்கூட்டர்களைப் புல்தரையில் ஓட்டிச் செல்வதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர்களைச் செலுத்த, நேற்று முதல் புதிய தடை செயற்பாட்டிற்கு வந்தது. அதை மீறுவோருக்கு, 2,000 வெள்ளி வரையிலான அபராதமும், மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!