" "" "

நடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது பொலீஸில் பரபரப்பு புகார்..! உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்..! காரணம் இது தானாம்..!!

நடிகை தமன்னா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது பரபரப்பு புகார் ஒன்றினை ஐயா வைகுண்டர் மக்கள் கட்சி டிஜிபியிடம் கையளித்துள்ளது. உலகம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக இந்தியா லாக் டவுண் செய்யப் பட்டுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆரம்பத்தில் நோய்தொற்று குறைவாக இருந்த போதும் தற்போது இந்தியா முழுவதும் பரவிவிட்டது. இதனை கட்டுப் படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 31ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த காலங்களில் இந்தியாவில் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளது.

ஒன்லைன் விளையாட்டுக்கள், ஒன்லைன் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் என அதிகரித்து வருகிறது. இதில் ஏமாறும் பல கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஒன்லைன் விளையாட்டுக்கள், ஒன்லைன் சூதாட்டங்களாக மாறியுள்ளன,

இதற்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ள குறித்த கட்சியினர். இந்த சூதாட்ட விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்றும் விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்கும் படியும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இவை தற்போது வைரலாகி வருகிறது..!!