அமெரிக்க மென்பொருள் நிறுவனமான அடோப் தனது உற்பத்தி சேவையை நிறுத்தவுள்ளது…!!!

சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மூல காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருந்தார். அதை தொடர்ந்து இன்னுமொரு அதிரடி நடவடிக்கையினை கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வெனிசுலா நாட்டுடனான அனைத்து வியாபார உறவுகளையும் துண்டித்துள்ளார். அதை தொடர்ந்து அமெரிக்க மென்பொருள் நிறுவனமான அடோப் அந்த நாட்டிற்கான தனது உற்பத்தி சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் இம் மாதம் 28 ஆம் திகதிக்கு பின்னர் அடோப் நிறுவனத்தில் உள்ள அனைத்து வெனிசுலா நாட்டு கணக்குகளும் முடக்கப்படவுள்ளது.

அதுவரை அந்த நாட்டை சேர்ந்தவர்கள் அடோப் மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய முடியும். இந்த தகவலை அடோப் நிறுவனமே வெளியிட்டுள்ளது.