இன்றைய ராசி பலன்! 25.03.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

25.03.2020 பங்குனி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் மரணயோகமாகும். பிரதமை பின் பகல் 5.30 வரை ரேவதி முழுவதும். சுப நேரம் அதிகாலை 4.45 – 6.15 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.15 – 1.45 வரையாகும். எமகண்டம் காலை 7.45 – 9.15 வரையாகும். குளிகன் காலை 10.45 – 12.15 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:             நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் மோதல்கள் வேண்டாமே. குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். தொலைதூரச் செய்திகளால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஆதாயம் கிடைக்கும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும் .

ரிஷப ராசி அன்பர்களே:              உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார் . புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். குடும்பத்திற்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:              நீங்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். குடும்ப பெருமை வெகுவாக உயரும். குல தெய்வ வேண்டுதல் நிறைவேறும். தம்பதியினருக்கு இடையில் உறவில் மகிழ்ச்சி கூடும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்ப பெரியவர்களால் ஆதாயம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இன்றைய நாள் நாவடக்கம் தேவைப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              நீங்கள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர் இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். ஆடம்பரப் பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                உங்கள் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வெளிநாட்டு யோகம் அமையும். வாகனத்தில் செல்லும் போது பொறுமை அவசியம். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                உங்கள் முன் கோபத்தை குறைக்கவும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். புதிய வாகனம் வாங்குவீங்கள். குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               தமபதியினருக்கு இடையில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு ஓய்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும் இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரி தாக்க வேண்டாம். மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்வீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டு. பெற்றோர்களின் அன்பு கிடைக்கும். இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.