" "" "

நடிகர் விஜயின் தந்தை ஆரம்பித்த புதிய கட்சியின் தலைவர் திடீர் தலைமறைவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் அவர்கள் புதிதாக தொடங்கிய “அகில இந்திய தளபதி விஜய் இயக்கத்தின்” தலைவர் ஆர்.கே ராஜா என்கிற பத்மனாபன் திடீரென தலைமறைவாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தந்தை மகனுக்கு தெரியாமல் கட்சி தொடங்கினார். இதனை மீடியாக்கள் மூலம் அறிந்த விஜய் குறித்த கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தந்தை மகன் இருவருமே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது குறித்த கட்சியின் மாநில தலைவர் ராஜா தலைமறைவாகி உள்ளார். நேற்றைக்கு. முன் தினம் ராஜா என்கிற பத்மனாபன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நடிகர் விஜயின் பொருளாளர் புஸ்ஸி ஆனந்த் பொலீஸாருக்கு பணம் கொடுத்து தொல்லை கொடுக்கின்றார். ஆனந்தின் சொல்லை கேட்டு பொலீஸார் என்னை மிகவும் துன்புறுத்தல் செய்கின்றனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கு பதில் அளித்த பொலீஸார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜா நபர் ஒருவரிடம் நில மோசடி செய்துள்ளார்,

இது தொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து அவரை தேடினோம், ஆனால் காணவில்லை, இது தவிர தொல்லை கொடுக்க வில்லை என திருச்சி பொலீஸார் தெரிவித்துள்ள நிலையில் ராஜாவை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து ராஜா கடத்தப் பட்டாரா என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜா என்கிற பத்மனாபன் தளபதி விஜயின் ” திருச்சி விஜய் மக்கள் இயக்கத்தின்” மாநில தலைவர் பதவியில் இருந்த நிலையில் விஜய் அவர்களால் தலைவர் பதவியில் இருந்து நீக்கப் பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.!!