" "" "

காதலை நம்பியதால் நடுவீதியில் அரை நிர்வாணமாக கிடந்த அப்பாவி இளைஞனின் சடலம்..! தர்மபுரியில் நடந்த கொடூர சம்பவம்..!!

தர்மபுரி ஒட்டர்திண்ணை கிராம வீதியில் உடலில் பல காயங்களுடன் அரை நிர்வாணமாக இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் விஜி. இவர் பெங்களூரில் மரக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் விஜி தனது உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.

இருவரும் ஒரே கிராமம் என்பதாலும் ராஜேஸ்வரியும் பெங்களூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததாலும் இருவரின் காதலுக்கும் எந்த தடையும் இருக்கவில்லை. இந்த நிலையில் ராஜேஸ்வரி மற்றும் விஜி தங்கள் காதல் பற்றி இரு வீட்டாரிடமும் தெரிவித்துள்ளனர். விஜியின் வீட்டில் காதலுக்கு சம்மந்தம் சொன்ன போதும் ராஜேஸ்வரி வீட்டில் விஜியின் தொழிலை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருவரும் காதல் திருமணம் ஆனால் திருமணமான ஒரே நாளில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக பஞ்சாயத்தரிடம் கூறியதுடன் ராஜேஸ்வரியையும் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அதன் பின் லாக் டவுன் முடிந்த பின் திருமணம் செய்து வைப்பதாக கூறிய பெற்றோர் திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருந்தனர்.

ராஜேஸ்வரியை அனுப்பும் படி கூறியும் அவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் ராஜேஸ்வரியின் தந்தை விஜிக்கு அழைப்பை ஏற்படுத்தியதுடன் புதிய தொழில் ஒன்று தொடங்கலாம் வீட்டுக்கு வாருங்கள் பேசலாம் என கூறியுள்ளார்.

மாமனாரை நம்பி சென்ற விஜி நேற்றைய தினம் சடலமாக மீட்கப் பட்டுள்ளார். விஜியை கொலை செய்தது யார்.? சடலம் எப்படி வீதிக்கு வந்தது என்ற விசாரணையை பொலீஸார் ஆரம்பித்துள்ள நிலையில் அனைவரும் சந்தேகமும் ராஜேஸ்வரின் பெற்றோரின் பக்கம் திரும்பியுள்ளது…!!