கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துமா ரெம்டிசிவிர் மருந்து?? ஆராச்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள்!
கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்துகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருள் நிர்வாகமான FDA கொரோனா வைரஸ் தொற்றுக்கான பல்வேறு தடுப்பு மருந்துகளை ஆராய்ந்து வரும் நிலையில் ரெம்டிசிவிர் ( remdesivir) விரைவில் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் பணிகள் விரைந்து இடம்பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரெம்டிசிவிர் மருந்தை உட்கொண்டதன் மூலமாக விரைவில் குணமடைந்து வருவதாக சில ஆய்வுகள் கூறியதை தொடர்ந்து டிரம்ப் அதற்கான அவசர கால பயன்பாட்டுக்கு உரிமை கோரியுள்ளார். சார்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் எபோலா, ஏய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் கொரோனா வைரசுக்கான மருந்தையும் தெரபி போன்ற சிகிச்சை முறைகளையும் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார்