ஹைட்ராக்சிகுளொரோகுயின் மருந்தை உட்கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி..!!
ஹைட்ராக்சிகுளொரோகுயின் மருந்தை தான் உட்கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மருத்துவர்களை கலந்தாலோசித்து தான் கடந்த ஒன்றரை வாரமாக அந்த மாத்திரைகளை உட்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்படாத நிலையில் அவருக்கு வெளிப்படையாக அந்த மருந்து பரிந்துரைக்கப்படவில்லை. அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையான எஃப்.டி.ஏ. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை மருத்துவமனைக் கட்டமைப்புக்கு வெளியே பயன்படுத்தக்கூடாது என முன்னரே எச்சரித்துள்ளது.