ஈரான் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பதற்றம்…!!!

ஈரான் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பதற்றம் நிரவி வருகின்றது. இந்த நிலை காரணமாக வளைகுடாவில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக கடல்சார் பாதுகாப்புப் பணியில் அமெரிக்காவுடன் பிரித்தானியா இணைந்துள்ளது.

கடந்த யூலை 4ஆம் திகதி ஜிப்ரால்டர் கடற்கரையில் சிரியாவிற்கு எண்ணெய் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பலைக் கைப்பற்றிய பிரித்தானியா கடற்படையினர். இது போன்ற பிரித்தானியாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து பிரித்தானியாவின் எண்ணெய் டேங்கரை ஈரான் கைப்பற்றியது.

!Advert!

வளைகுடாவில் எங்கள் கவனம் தற்போதைய பதட்டங்களை குறைப்பதில் உறுதியாக உள்ளது என்று கப்பலின் கமெண்டர் அதிகாரி ஆண்டி பிரவுன் கூறினார். கடல்வழிசெலுத்தல் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உறுதியளிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டின் முக்கிய நோக்கமே இது தான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த மாதம் முதலே வளைகுடாவில் பிரித்தானியாவின் டங்கன் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது, அனுபப்பட்டுள்ள பிரித்தானியா போர்க்கப்பல் எச்.எம்.எஸ் கென்ட் வளைகுடாவில் டங்கனுடன் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

!Advert!

ஈரான் வெளிநாட்டுக் கப்பல்களைக் கைப்பற்றி வரும் விளைவாக, துபாய் மற்றும் அரேபிய வளைகுடாவைச் சுற்றியுள்ள பயணங்களை பி அண்ட் ஓ குரூஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க சர்வதேச கடல்சார் பாதுகாப்புப் பணியை ஈடுபட்டுள்ளது.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.