நியூஸிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் மைதானத்தில் தடுமாறும் இந்திய அணி..! காரணம் இது தான்..!!

உலகக் கோப்பைக்கான செமி பைனல் தற்போது நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையே இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்கள் இழந்து 239 ஓடங்களை எடுத்தது. இந்திய அணி செமி பைனலில் வெற்றிபெற 240 ஓட்டங்கள் இலக்காக இருந்தது.

நேற்று மழை காரணமாக இன்று போட்டி ஆரம்பமானது. போட்டியின் முக்கியத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்ட நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை தடுமாற வைத்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 1 ஓட்டத்தில் அவுட்டாகி செல்ல, கேப்டன் விராத் கோலியும் 1 ஓட்டத்தில் அவுட்டானார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் உட்பட 6 விக்கட்டுக்களை அதிரடியாய் இழந்தது இந்திய அணி. மைதானம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி ரன்களை எடுப்பதில் தடுமாறு வருகிறது.

தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றியும் தோனியின் கையில் உள்ளது. மைதானத்தில் நிதானமாக தோனி துடுப்பெடுத்து ஆடி வருவதை காண முடிகிறது. இந்தியா வெற்றி பெறுவதற்கு இன்னும் 92 ரன்கள் தேவையாக உள்ளது. 61 பந்துகள் கைவசம் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம்…!!

You might also like
error: Alert: Content is protected !!