இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை; கோரியது தமிழக அரசு!

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என தமிழக சட்டச் சபையில் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தமிழக சட்ட சபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

இதில, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதற்கிடையே, ஆளுநர் உரையைப் புறக்கணித்து சட்ட சபையிலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர்,

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு சார்பாக வலியுறுத்துறோம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தமிழகம் சார்பான பல்வேறு திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.