வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா சென்று தவிக்கும் மாணவர்களுக்கு விக்டோரியா மாநில அரசு வழங்கும் 1100 ஆஸ்திரேலிய டொலர்கள்..!! விண்ணப்ப படிவம் அனுப்ப செய்தியை படியுங்கள்..!!

அவுஸ்திரேலிய அரசினால் அறிவிக்கப் பட்ட நிதியுதவிகளை பெற தகுதிபெறாத விக்டோரியா மாநிலத்தில் இருக்கும் வெளி நாட்டு மாணவர்களுக்காக சுமார் 45 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்கி உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பல்வேறு வகையில் பாதிக்கப் பட்டுள்ள வெளிநாட்டில் இருந்து வந்து விக்டோரியா மாநிலத்தில் ஆதரவற்று இருக்கும் மாணவர்களுக்காக விக்டோரியா மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. The International Student Emergency Relief Fund என்ற உதவி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த உதவி வழங்க உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன.

இது குறித்து விக்டோரியா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளி நாடுகளில் இருந்து எமது மாநிலத்தில் வந்து கல்விபயிலும் மாணவர் ஒருவருக்கு 1100 ஆஸ்திரேலிய டொலர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பணி புரிந்துகொண்டு கல்வி பயின்று வந்த பல மாணவர்கள் வேலையை இழந்துள்ளனர். சிலரது வேலை நேரம் குறைக்கப் பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெளி நாட்டு மாணவர்கள் விக்டோரியா மாநில பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கியுள்ளனர்.தற்போது அவர்களுக்கு உதவ வேண்டிய நேரமிது என்பதால் உதவுகிறோம் என தெரிவிக்கப் பட்டுள்ளதுடன் இந்த உதவித் தொகையான 1100 டொலர்கள் ஒரு முறை மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது..! வெளிநாடுகளில் இருந்து வந்து விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மாணவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம்..! “விண்ணப்ப லிங்”