மீண்டும் ஏவப்பட்ட ஏவுகணைகளால் பதற்றம்; அமெரிக்கத் தூதரகம் அருகே வெடித்தது!

அமெரிக்க – ஈரான் போர்ப்பதற்றம் தொடர்ந்துவரும் நிலையில், மீண்டும் அமெரிக்கத் தூதுரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ளது.

இதனருகில் இன்று மூன்று ஏவுகணைகள் திடீரென வந்து வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த ஏவுகணைத் தாக்குதலையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு உரிமைகோரவில்லை.

எனினும், ஈரானின் ஆதரவு துணை இராணுவக் குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.