" "" "

கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்? ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு: உஷார் மக்களே!! உஷார்!!

“பேஸ்புக் வந்து நாசமாப் போவோர்” எனும் பேஸ்புக் குழுமத்தின் ஊடாக  அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது பேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டு புதிதாக  ஒரு சாட் குறூப் (Chat Group) திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் குறூப்பிற்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் குறூப் என்று திண்டாடிய எனக்கு , அந்தக் குறூப்பிலிருந்து  வாட்ஸ் அப் சாட் ரூமுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதுவும், தமிழ் பெயரில் வாட்ஸ் அப்பில் சாட் ரூம் என்று விழியினை உருட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த நண்பியின் வாட்ஸ் அப்பிற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அழைப்பு வந்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அழைப்பினை மேற் கொண்டால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் எனும் ஆவல் மேலெழ அவரின் வாட்ஸ் அப்பிற்கு அழைப்பினை மேற்கொண்டேன்.நம்மாளுங்க “காஞ்ச மாடு – – – – – – ” என்று ஒரு பழ மொழி சொல்வார்களே! அது போன்று வாட்ஸ் அப் சாட் ரூம் பற்றிய அறிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே என எண்ணி இந்த விடயங்களையும் அறியும் ஆவலோடு நண்பியுடன் பேச ஆரம்பித்தேன். இனி இந்த நண்பியின் பெயரை ஜூலியா என்று வைத்துக் கொள்வோமா? ஜூலியாவிடம் சாட் ரூம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் எனக்குள் எழ என் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன். “என்னமோ போங்க ராஜேஷ் நீங்க இந்த மாதிரி விடயங்களை எடுத்து எழுதி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினால் பல பெண்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கப் போகிறீர்களா?” என்று புலம்பினார்.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
கொஞ்சம் நிதானமாக கட்டுரையினை நீ வரைய வேண்டும் எனக் கூறி; “நீ என்ன எழுதினாலும் அடுத்த நிமிடமே, சூடு சுறணையற்ற நாதாரி இணையத் தளங்கள் சில உன் கட்டுரையினையும் வெட்கம் மானமின்றி கொப்பி பேஸ்ட் செய்து மகிழப் போகிறார்களே!

இதனால் உனக்கு என்ன பயன் என்று கேட்டவரிடம்; “பல பெண்களாவது இனிமேல் இந்த வலையில் விழுவதிலிருந்து தப்பிப்பார்கள்” என்றதும் என் வழிக்கு வந்து, பேச்சைத் தொடங்கினார் ஜூலியா. ஏற்கனவே பல white group வாட்ஸ் அப் சாட் ரூம்களில் பல பெண்களின் வாழ்க்கையைப் படு குழியில் தள்ளும் நோக்கில் பல கும்பல்கள் தம் கை வரிசையினைக் காட்டி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் அண்மையில் தமிழ்——- எனும் பெயரில் பெண்களுக்கும், அங்கே சாட் பண்ணும் ஆண்களுக்கும் தனி நபர் உரிமையினைப் பாதுகாக்கும் வகையில் தன் வாட்ஸ் அப் சாட் ரூம் அமைய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான் வாட்ஸ் அப் சாட் ரூம் ஆரம்பித்ததாக சொன்னார் ஜூலியா. “சாட் ரூமுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க என்று? கேட்டேன்.” “ஆண்களும் பெண்களும் வருவார்கள்! அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும் தம் கைங்கரியத்தினை அரங்கேற்றும் நோக்குடனும், வெளியூரில் கணவன் உள்ள பெண்களும் தம் பொழுது போக்கிற்காகவும் சாட் ரூமை நாடுவார்கள்” என்று சொன்னார் ஜூலியா. கலியாணம் கட்ட வேண்டும் எனும் ஆவலில் இருந்த நான் இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் பம்மிக் கொண்டா இருப்பேன்? “அப்படீன்னா சாட் ரூமில் பிகருங்க மாட்டுமா?” என ஒரு கேள்வி கேட்டேன்.

“ஆம் நிச்சயமாக மாட்டும்! நீ பேசுறதைப் பொறுத்து!” எனச் சொல்லிய ஜூலியா, பொண்ணுங்களுடன் பேசுவதற்கான ஐடியாக்களையும் சொல்லிக் கொடுத்தார். அடியேனும் ஒரு தற்காலிக வாட்ஸ் அப் அக்கவுண்டை உருவாக்கி சாட் ரூமினுள் நுழைந்தேன். எப்படி நம்ம வலையில் விழ வைக்கலாம் என நினைத்த எனக்கோ சாருநிவேதிகா பற்றிய நினைப்பு மனதில் வர; இந்த சாட் ரூம்கள் பற்றி அலசிப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆவல் மேலிடவே மீண்டும் ஜூலியாவைத் தொடர்பு கொண்டேன்.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தமிழ் மொழியில் வாட்ஸ் அப் தமிழர்களால் நடாத்தப்படும் சாட் ரூம்கள் பற்றி அறியவேண்டுமானால் நீ மலேசியாவினை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தமிழ்—– சாட் ரூமில் உள்ள யாரையாச்சும் தொடர்பு கொள்ள வேண்டும்” என ஆலோசனை கொடுத்து, தொடர்பு கொள்வதற்கான வாட்ஸ் அப் நம்பரையும் கொடுத்தார் ஜூலியா. நானும் அங்கே உள்ள முரளி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்து ரகசியங்களைச் சொல்லத் தயங்கிய முரளி பின்னர் ஜூலியாவின் அழைப்பினைத் தொடர்ந்து மெதுவாக திடுக்கிடும் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். “தம் வாட்ஸ் அப் சாட் ரூமின் நோக்கம் பெண்களை மடக்கி எம் வலையில் விழ வைத்து அனுபவித்து மகிழ்வது தான்” என்று பச்சையாகப் பேசினார். அப்போ நான் கேட்டேன்! “எப்படி பொண்ணுங்களை மடக்குவீங்க என்று?

“முதலில் இங்கே சாட் ரூமிற்கு வரும் தமிழ் நண்பர்கள் பொது வெளியில் பெண்களோடு பேசத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களோடு பிரைவேட் சாட்டிங்கிற்குப் போனதும் மெது மெதுவாக போன் நம்பரையோ அல்லது பேஸ்புக் முகவரியினையோ கேட்பார்கள். திருமணமான பெண்கள், கணவன் வெளியூரில் உள்ள பெண்கள் தான் பொதுவாக இந்தச் சாட் ரூம்களை நாடுவதால், வீட்டில் மாட்டிக்காது தப்பிக்கும் நோக்கில் சாட் பண்ணிய HISTORY இனை அழிப்பது முதல், மொபைலில் ஒரு விபரமும் சேமிக்காது கணவனிடமிருந்து தப்புவதற்கான வழி முறைகளையும் முதற் கட்டமாகச் சொல்லிக் கொடுப்போம் என்று கூறினார் முரளி. முதல் நாள் சாட்டிங்கில் பொதுவான விடயங்களைப் பேசியதும் அடுத்த நாள் சாட்டிங்கில் மெது மெதுவாகப் படங்களை அனுப்பத் தொடங்குவோம்.

முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம். அதற்கும் சாதகமாக இதயம் படம் மறு பக்கமிருந்து கிடைத்தால் அடுத்த நொடியே முத்தம் கொடுக்கும் கார்ட்டூன் படங்களை அனுப்புவோம். பின்னர் என்ன? நேரடியாகவே மேட்டர் பற்றிப் பேசத் தொடங்கிடுவோம். பொதுவாக இங்கே வரும் பெண்களிடம் நாம் கேட்கும் கேள்வி! “கணவன் அந்த விடயத்தில் எப்படி என்று?” கணவன் நன்றாகத் தான் தாம்பத்திய சுகம் கொடுக்கிறார் என்று பெரும்பாலான பெண்கள் பதில் கூறுவார்கள். “அப்போது குறுக்கிட்ட நான்; அப்படீன்னா அவங்க ஏன் சாட் ரூமை நாடனும்? எனக்குப் புரியாத புதிராக இருக்கிறதே என்று கூறினேன்.

தனக்கும் புரியாத புதிராகத் தான் இந்த விடயம் இருப்பதாக கூறினார் முரளி. ஒரு வேளை நாகரிக மோகத்திலும் வரலாம் என்று கூறினார். பசுவிற்குத் தெரியாமலே பாலைக் கறக்கிற ஜாதி தானே நாம என்று கூறிய முரளி; தாம்பத்திய உறவினைப் பற்றிப் பேசத் தொடங்கி, கணவனின் அன்பினைப் பற்றி அலசும் நாம், பின்னர் நேரடியாகவே போன் செக்ஸ் பத்திப் பேசத் தொடங்கிடுவோம். பொண்ணுங்களும் அந்த நிமிட சுகத்திற்காகப் போன் செக்ஸ் பண்ண ஒத்துழைப்பாங்க! இது நம்மைப் போன்றோருக்கு ஜாலி தானே எனக் கூறினார் முரளி. பெண்களோடு பேசத் தொடங்கும் போது நாம் செய்கின்ற முதல் வேலை, அதனை ரகசிய மென் பொருட்கள் மூலமாக ஒலிப்பதிவு செய்வது தான் என்று கூறினார்.

“அப்படி ஒலிப்பதிவு செய்து வைத்தால் தானே நாம அவங்களை நேரில பார்த்துப் பேசி. அவர்கள் உடல் உறவிற்கு மறுத்தாலும் கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட முடியும் என்று கூறினார் முரளி.” ஒலிப்பதிவுகள் ஏதாவது இருந்தால் கொடுக்க முடியுமா என்று கேட்டதும் மூன்று மாதிரிக்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார் முரளி. போன் செக்ஸ் என்பது ஆங்கிலேயர்கள், மேலைத் தேச நாட்டவர்களிடம் மிகவும் பிரபல்யமானது எனவும், முகம் தெரியாமல் ஒருவரை ஒருவர் நினைத்து தொலைபேசி மூலமாக பேசிப் பேசி இன்பம் காண்பது தான் போன் செக்ஸ் என்றும் இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு தாம் பேஸ்புக் messanger இனைத் தான் பயன்படுத்துவோம்” என்றும் கூறினார் முரளி.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நம்மளோட வாட்ஸ் அப் சாட் ரூம் மலேசியாவில இருந்தாலும், இலங்கை இந்தியப் பெண்கள் தான் அதிகமாக நம்ம சாட் ரூமுக்கு வருவாங்க. இலங்கை இந்தியாவில் உள்ளோர் தமக்கு விருப்பமான நண்பர்களோடு உரையாடித் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, தாம் ரகசியமாகச் சாட் ரூமினைக் கண்காணித்து அங்கே பரிமாறப்படும் தகவல்களை, சேமிப்பதோடு, ஒலிப்பதிவும் செய்து வைத்துக் கொண்டு பின்னர் பெண்களோடு பேசத் ஆரம்பிப்போம். அப்போது எம் வலையில் யாராவது விழவில்லை என்றால் உடனடியாக இந்த ஒலிப் பதிவுகளை பாலியல் தளங்களில் பரப்பிவிடுவோம் எனக் கூறி அச்சுறுத்துவோம். இத் தளங்களுக்கு வரும் பெண்களில் பலருக்கு உள் மனதில் விருப்பம் இருந்து வீட்டிற்குப் பயந்து எம்மோடு வர மறுத்தாலும் ஒலிப்பதிவுக்குப் பயந்து ஒத்துக் கொள்வார்கள் எனக் கூறினார் முரளி.

அழகான உடலமைப்புக் கொண்டோரை நாம் நண்பர்கள் சிலர் ருசித்து விட்டு, எம் ஏனைய நண்பர்களுக்கும் ருசி பார்க்க மிரட்டிப் பணியவைத்து அனுப்பியிருக்கிறோம் எனவும் கூறினார் முரளி! “மலேசியாவில் இருக்கும் நீங்கள் இலங்கை – இந்திய நாடுகளில் வாழும் பெண்களை எப்படி அணுக முடியும்?” எனக் கேட்ட போது; “தம் நண்பர்கள் இலங்கை இந்தியாவில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தம் வேலை முடித்ததும் எமக்கான பணத்தினை அனுப்பி வைப்பார்கள் எனக் கூறினார் முரளி. நாம் மலேசியா, மற்றும் சிங்கப்பூரில் எம் வலையில் விழுவோரை மாத்திரம் கண்காணிக்கிறோம் எனக் கூறினார் முரளி! இந்த சாட் ரூமில் மிகவும் பிரபலமான பாடல் என்ன தெரியுமா என்று கேட்டு ஒரு பாட்டுச் சொன்னார் பாருங்க. “ஆனந்தம் ஆனந்தம் பாடும்! மனம் அடுத்தவன் மனைவியை நாடும்!” என்ன கொடுமை இது என எனக்குள் நானே திட்டித் தீர்த்தேன்.

தமது சாட் ரூம்களில் பகலில் மதிய வேளையில் நாற்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் எனவும், இரவில் அறுபது முதல் எழுபது வரையான நண்பர்கள் வந்து கூடுவார்கள் எனவும் கூறிய முரளி, இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய வெளி நாடுகளில் தமிழில் இது போன்று பல சாட்டிங் தளங்கள் உள்ளதாகவும் அங்கும் இத்தகைய செயல்களே நடப்பதாகவும் கூறினார். பொது இடத்தில் சாட் பண்ணுதல், பாடல் பாடி மகிழுதல் முதலிய செயல்களில் தொடங்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பின்னர் தனி நபர் சாட்டிங்கினூடாக (Private Chat) அந்தரங்க விடயங்களைப் பேசத் தொடங்கியதும் சூடு பிடிக்கத் தொடங்கி விடும் என்றார். சாட் பண்ணி கணவனிடம் அகப்பட்ட பெண்களில் சிலரது வாழ்க்கை விவகாரத்து எனும் நிலையினை அடைந்திருப்பதாகவும் வருத்தத்தோடு கூறினார்.

தம்மைப் போன்ற பலருக்கு பணம் தேவை! அதற்காக இப்படிச் செய்வது தவிர்க்க முடியாது என்றவரிடம், ஏன் வேறு ஆன்லைன் வேலைகளைச் செய்து சம்பாதிக்க முடியாதா எனக் கேள்வி கேட்டேன். அவரோ நோகாமல் நிறைய உழைக்கனும் என்றால் இந்த மாதிரியான வழிகள் தான் பயன் தரும் என கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றிப் பதிலளித்தார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி கூறும் போது, குறுக்கிட்ட அவர், என்னமோ போங்க! நீங்க இந்த தகவல்களையெல்லாம் சேகரித்து ஆதாரப்படுத்தி எழுதும் போது, சில மானங்கெட்ட ஈனச் செயல் புரியும் இணையத் தளங்கள் உங்களின் புரட்சி வானொலிப் பக்கத்தில் வெளியான பதிவுகளை அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு மகிழ்கிறார்களே! முதல்ல அதனைக் கண்டியுங்க என ஆதங்கத்தோடு சொல்லி விடை பெற்றார் முரளி!அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இப்படியும் நம் சமூகத்தில் சிலரா என வருத்தத்துடன் இவ் விடயத்தினைப் பதிவாக எழுதுவது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிப் பார்த்தேன். பலரது வேண்டுகோள் ஒலிப் பதிவுகளை இணைத்து எம் கலாச்சார சீரழிவினையும், தனி நபரை அவமதிக்கும் செயலையும் செய்ய வேண்டாம் எனும் அன்புக் கட்டளையினைத் தாங்கி வந்த காரணத்தினால் ஒலிப்பதிவுகளை இப் பதிவில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியூரில் இருக்கும் கணவன்மார் யாருக்காவது உங்கள் மனைவி மீது சந்தேகம் ஏற்படின் அவர் பயன்படுத்தும் கணினியினைக் கண்காணிக்கும் மென் பொருட்களை நிறுவலாம். பேஸ்புக், மற்றும் ஏனைய சாட்டிங் தளங்களை உங்கள் வீட்டுக் கணினி மூலம் பார்க்க முடியாதவாறு Block பண்ணும் மென் பொருட்களை நிறுவலாம்.

கணவன்மாரும் தம் மனைவியின் மீது சந்தேகம் வரின் தம் வீட்டு இணைய உலவியில் உள்ள Browsing History இனைச் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் கணவன் மார் மனைவிக்குத் தெரியாமல் செய்தால் ஒன்னுமே பண்ண முடியாதுங்க! நேராக கோர்ட் வாசலுக்குத் தான் போக முடியுமுங்க. ஹி…ஹி..!
நன்றி: பதிவரும் சாட் ரூம் உரிமையாளருமான ஜூலியா மற்றும் முரளி!
புரட்சி வானொலிக்காக திருச்சியிலிருந்து ராஜேஷ்.