இடுப்பு சதை அசிங்கமாக தொங்குதா.!? அட கவலையை விடுங்கள்… இதோ சூப்பர் தீர்வு..!!

உண்மையில் இடையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு முக்கியமான காரணமாக அமைவது உணவுப்பழக்கவழக்கங்களும்  சொகுசு வாழ்க்கையும்தான். உணவு  மற்றும் உடற்பயிற்சிகளை சரிவரத் தொடர்ந்து செய்து வந்தாலே  கொடி இடை என்பது சாத்தியமானது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நமது இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில்  சப்ஜடேனியஸ் என்னும் கொழுப்பு இருக்கின்றது.  இக் கொழுப்பானது கரையாமல் தங்கி அதனால் இடுப்புப் பகுதியில் அதிகம் சதை வைக்கின்றது. இதன் காரணமாகவே இடுப்புப் பெருத்துவிடுகின்றது.

இடுப்புச் சதையைக்  குறைக்க சிறப்பான வழி என்ன தெரியுமா? நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித்திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இடுப்பு மடிப்பு குறையும். அப்படியென்றால் கலோரி குறைவான உணவைச் சாப்பிடுவதும் இடுப்பிற்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.

நேராக நின்று கைகளை நேராக நீட்டுங்கள் உங்கள் கைகளை நீட்டுவது அவசியம் ஏனென்றல அது பேலன்சிங் செய்ய அவசியகும். பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்தரியுங்கள். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும். கால் விரல்களில் பேலன்ஸ் செய்ய வேண்டாம்.

தரையில் வலது பக்கமாக சாய்ந்து படுத்து இடது காலை மேலே தூக்கவும். சில நிமிடங்கள் கழித்து கீழ் இறக்கி இடது பக்கமாகப் படுத்து வலது காலை மேலே தூக்கவும். இப்படி மாற்றி மாற்றி குறைந்தது 10 தடவைகளாவது செய்யவேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.காலையில் தேநீர் கோப்பி குடிப்பதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சைச் சாறு  , தேன் கலந்து குடிக்கலாம்.தினமும் உணவில் 2 தேக்கரண்டி கொள்ளு , 2 சின்ன வெங்காயம் , பச்சையாகச் சேர்த்து கொள்ளுங்கள் அதிக கொழுப்புச் சேருவதை தடுக்கும்.