கவிஞர் வைரமுத்துவின் செயலை வீடியோவாக வெளியிட்ட சின்மயி..! வைரமுத்து அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

சின்மயி வைரமுத்து சர்ச்சை கடந்த வருடமும் இந்த வருட ஆரம்பத்திலும் அதிகம் பேசப் பட்டது. அதாவது பாடகி சின்மயி அவர்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பின் சுசி லீக்ஸ் போல் சில நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்ட சின்மயி நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரம், தொல்லை போன்றவற்றிற்கு குரல் கொடுத்து வருகிறார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் அண்மையில் சின்மயி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில் ஏ ஆர் ரஹ்மான் வைரமுத்து போன்றோர் இருக்கின்றனர். அதில் வைரமுத்துவின் ரசிகர் ஒருவர் வைரமுத்துவிற்கு ஐ லவ் யூ சொல்கிறார்.

அதற்கு வைரமுத்து அவர்கள் எனக்கு ஐ லவ் யூ சொன்னது ஆணா பெண்ணா என பார்..வயதை பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்கிறார். இதற்கு ரஹ்மான், வைரமுத்து உட்பட அனைவரும் சிரித்து விடுகின்றனர்.

இது ஒரு சாதாரண உரையாடலாக கேலியும் கிண்டலுமாக இருந்த போதும் வைரமுத்து அவர்களின் வக்ர குணம் தெரிவதாக சின்மயி வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் வைரமுத்து அவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்..!!