முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறதா.!? இந்த இலைகளை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்..நீங்களும் அழகியாகலாம்..!!

இன்றைய காலத்தில், நம் சூழல் மாறுபாடு காரணமாக நம் முகம் பொலிவிழந்து காணப்படும். இந்நிலையில் இறுதியில் அவர்கள் இயற்கை முறைகளைத் தான் நாடுவார்கள். அவ்வாறு இயற்கையாகவே முக வசீகரத்தை ஏற்படுத்தக்கூடிய சில குறிப்புக்களை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இவ்வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும். அத்தோடு கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

தினமும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.புதினா இலைகள் முகத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றன. இவ் இலைகளின் சாற்றினை எடுத்து முகத்தில் தடவிவந்தால் முகத்தில் ஏற்படும் உலர் தன்மை நீங்கப்பெற்று முகப் பருக்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.முகச் சுருக்கங்களை போக்குவதில் மோருக்கு சிறப்பான இடம் உண்டு.

மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும். மேலும் பாலாடைக் கட்டிகளும் இதற்கு பயன்படுத்தலாம்.முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.