சுற்றுலா பேரூந்து விபத்து ஒருவர் பலி… 40 பேர் காயம்…!
இலங்கை கடுகண்ணாவ பகுதியில் கல்வியியற் கல்லூரி பயிற்சி மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு புறப்பட்ட பேரூந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் அப் பேரூந்தின் நடத்துனர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் சுற்றுலா சென்றிருந்த 40 வரையான மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா புறப்பட்ட பேரூந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை பேரூந்து இழந்தமையே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் பஸ் நடத்துனர் அக்கரைப்பற்று சவுத் வீதியை சேர்ந்த இன்ஹாம் எனக் கூறப்படுகின்றது. காயமடைந்த சுமார் 40 பேர் கண்டி – மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பஸ்கள் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளதாகவும் சுற்றுலா சென்ற 4 பஸ்களில் ஒன்று முந்திச்செல்ல முற்படும் போதே பாதையிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்வண்டியில் 54 ஆசிரியர் பயிற்சி கலாசாலையை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்கள் குழாம் பயணித்ததாகவும் விபத்துக்குள்ளாய ஆசிரியர்கள் மாவனெல்லை மற்றும் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்னது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”