" "" "

இரவு மகிழ்ச்சியாக உறங்கச் சென்ற குடும்பம், காலையில் சடலமாக மீட்பு! அவதானம் மக்களே.!

மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை, நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து எம்மை அழைத்துச் சென்று விடுகிறது. எல்லோரும் வாழ்ந்து முடித்து மகிழ்ச்சியாக மரணிக்கவே நினைப்பார்கள் ஆனால் படைத்தவன் என்ன நினைக்கிறானோ அது தான் இறுதியில் நடக்கிறது. வாழ ஆசைப்பட்ட குடும்பம் ஒன்று நேற்றைக்கு முன் தினம் இலங்கையில் எதிர்பாராத விதமாக மரணித்தது ஒட்டுமொத்த உறவுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாவனெல்ல, தெவனகல பகுதியை சேர்ந்தவர் விஜேரத்ன. 55 வயதான இவருக்கு 29 வயது மகன் மற்றும் 23 வயது மகள் உள்ளனர். மனைவி பிள்ளைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்த விஜேரத்ன நேற்றைக்கு முன் தினம் இரவு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உறங்கச் சென்றுள்ளார். ஆனால் காலையில் ஒருவர் கூட உயிருடன் இல்லை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் மண்சரிவு ஏற்பட்டு விஜேரத்னவின் வீடு மூடப்பட்டுள்ளது. 4 பேரும் மண்ணால் மூடப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது குறித்த பகுதியில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட நிலையில் அங்கு இருக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

ஆனால் விஜேரத்ன அவர்களின் மகன் வெளி நாடு சென்ற நிலையில் அவர் அனுப்பிய பணத்தை கொண்டு 2 மாடிகள் கொண்ட வீடாக அமைத்துக் கொண்டனர். வெளி நாடு சென்ற மகன் சில மாதங்களுக்கு முன்பு வந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் வெளிநாடு செல்ல இருந்துள்ளார். இந்த நிலையிலேயே அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.!