" "

கனடாவில் திடீரென மாயமான தமிழர் நடராஜ்..! மக்களின் உதவியை நாடியுள்ள Toronto பொலீஸார். தயவு செய்து பகிர்ந்து உதவுங்கள்…!!

கனடாவில் திடீரென மாயமான இலங்கை தமிழர் தொடர்பான விபரங்களை Toronto பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜ் மகேந்திரராஜா என்கிற 52 வயதான நபர் கடந்த 21ம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை தொடர்ந்து குடும்பத்தினர் பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர். இதன் போது நடராஜ் அவர்கள் இறுதியாக காலை 10 மணியளவில் Islington Ave மற்றும் Elmhurst பகுதிகளில் காணப்பட்டதாக சிசிடிவி கேமாராக்களின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.

காணாமல் போன அன்று நடராஜ் அவர்கள் நீல நிறந்திலான அரை காற்சட்டையும், டீ சார்ட்டும் அணிந்திருந்துள்ளார். இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ள பொலீஸார் நடராஜ் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவிள்ளனர். முடிந்த வரை பகிர்ந்து நடராஜை மீட்க உதவுவோம்..!!