" "" "

12 வயது சிறுமியை 105 தடவை பாலியல் பலாத்காரம் செய்த சிறிய தந்தை.!! 1050 வருடங்கள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்.!!

மனைவியின் மூத்த கணவரின் மகளான 12 வயது மகளை 2 வருடங்களில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு மலேசிய நீதிமன்றம் 1050 ஆண்டுகள் சிறை தண்டனையும் 24 பிரம்படிகளும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் 36 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2015ம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

தனது மகளுடன் தனிமையில் 2018ம் ஆண்டு வரை வாழ்ந்த அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட நபருக்கு வேலை இல்லாததால் சிறுமியை அவருடன் விட்டுவிட்டு தாய் வேலைக்கு சென்றுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

2020 ஆண்டு வரை கணவரின் சுய ரூபம் அவருக்கு தெரியவில்லை. சிறுமி ஒரு நாள் வலியால் துடித்துள்ளார். தாயை வேலைக்கு போக வேண்டாம் என கூறி அழுத்துள்ளார்..தாய் காரணம் கேட்ட போது சிறிய தந்தை தன்னை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்வதால் வலி தங்க முடியவில்லை என கூறியுள்ளார்,

அத்துடன் வெளியே சொன்னால் கொன்று விடுவார் என கூறியுள்ளார் அதிர்ந்து போன தாயார் உடனடியாக பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். சிறுமிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் சுமார் 105 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குறித்த நபரின் வழக்கு விசரணைக்கு வந்த போது அவருக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 கடுமையான பிரம்படியும் கொடுக்கும் அடி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.!!