இந்திய பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது..!!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் சி சின்பிங்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. மேலும் இந்த சந்திப்பு தமிழகத் தலைநகர் சென்னையில், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இந்த சந்திப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் இரு தலைவர்களும் உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார். கடந்த வருடம் இந்திய-சீன எல்லைப் பிரச்சினை குறித்து திரு. மோடியும், திரு. சியும் சீனாவின் வூஹான் (Wuhan) நகரில் பேச்சு நடத்தியுள்ளனர். இருதரப்பு உறவுகளை நிலைப்படுத்த அது உதவியுள்ளது.

இந்த நிலையில், சென்னை சந்திப்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அணுக்கமான பங்காளித்துவத்தை உருவாக்குவது தொடர்பாக இந்தக் கலந்துரையாட உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.