அடிக்கடி வயிறு வலி, பசியின்மையால் அவதி படுகின்றீர்களா..!? அப்படியானால் குடற்புழு தொல்லை தான்..! இதை மட்டும் செய்யுங்கள் புழுக்கள் கொட்டிவிடும்..!!

புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போகும் குறிப்பு பெரியவர் முதல் சிறியவர் வரை அவதி படும் ஒரு நோய்க்கான தீர்வு தான். அப்படி என்ன நோய் வேறென்ன குடற்புழு தான். அதாவது வயிற்றில் பூச்சி அல்லது குடல்பூச்சி, குடல் புழு என ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக கூறுவார்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதற்கு நம்ம கிராமங்களில் பெரிதாக வைத்தியம் இருக்காது பெரிய வேப்ப மரத்தின் பட்டைகளை வெட்டி வந்து கழுவி பெரிய பானையில் போட்டு கொதிக்க வைத்து இரத்த கலரில் வரும் வேப்பம் பட்டை தண்ணீரை கால் டமிளர் அளவு குடிக்க கொடுப்பார்கள் அந்த கசப்புக்கு சிறிதளவு சீனி,அவ்வளவு தான்.

குடற்புழு தொல்லை தீர்ந்தே போய் விடும். ஆனால் நகரத்தில் அந்த வாய்ப்பு குறைவு அனைத்திற்குமே ஆங்கில மருத்துவத்தை தேடி ஓட வேண்டிய நிலை. அட ஏன் கவலை படுறீங்க எங்க இருந்தாலும் இலகுவான நம்ம பாட்டி வைத்தியம் இருக்கு. சரி பார்க்கலாம் வாங்க …

எல்லோருக்கும் இலகுவாக கிடைக்க கூடிய கிராம்பு இரண்டை எடுத்து தூளாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப்பில் சுடு நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அரை கரண்டி கிராம்பு தூளை ஒரு கப் சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள் . நன்றாக ஆறியதும் இரவு உறங்கச் செல்லும் முன் குடியுங்கள். குடற்புழு தொல்லை முடிந்துவிடும்.

அதே போல் வேப்ப மரத்தின் இலைகளை நன்றாக காய வைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள் மாதம் முறை டீ போல் போட்டு குடியுங்கள். அதாவது ஒரு கப் சுடு நீரில் ஒரு கரண்டி வேப்பம் இலை தூள் போட்டு குடியுங்கள் குடற்புழு தொல்லை நிரந்தரமாக இருக்காது.இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..நன்றி..!