" "" "

தலையில் சீப்பை வைத்தாலே கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா.? இதோ இலகுவான இயற்கை மருத்துவம்..!

இன்று பலரது வாழ்க்கை ஓட்டத்தை பார்த்தால் கண்டிப்பாக வழுக்கை தலையுடனாக தான் இருக்கும். இதில் கேலி கிண்டல்கள் இல்லை நிஜ வாழ்க்கை இப்படி தான் இருக்கின்றது. அன்று தான் வழுக்கை தலை என கிண்டல் செய்வார்கள் இன்று 20 வயது ஆகும் போது முன் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விடுகிறது. 20 வயது இளைஞனை 40 வயது போல் பார்ப்பவர் கண்களுக்கு காட்டி விடுகிறது இந்த வழுக்கை.

இதற்காக மார்க்கட்டில் மூலிகை எண்ணெய் என பல ஆயிரங்களை கொடுத்து எண்ணெய்கள் வாங்கினாலும் பலன் எண்ணவோ zero தான்.வழுக்கை தலையில் முடி வளராது என்பார்கள் ஆனால் முடி வளரும். செயற்கைகளுக்கு கட்டுப் படாத சில விடயங்கள் இயற்கைக்கு கட்டுப் படும் என்பதை இந்த தலை முடி வளர்தலை வைத்து கண்டு பிடித்துவிட முடியும் என்பது தான் உண்மை.

செயற்கையாக எது கிடைத்தாலும் அது நிரந்தரம் கிடையாது ஆனால் இயற்கையாக நாம் செய்யும் செயல்கள் எம்மை விட்டு போகாது. அதனால் இயற்கை முறையில் தலை முடி வளர்வது பற்றி இன்று பார்க்கலாம். இதற்கு தேவையானது பெரிய வெங்காயம் இரண்டு, வைட்டமின் ஈ டாப்லட் ஒன்று, தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி.

செய்முறையை பார்க்கலாம் முதலில் வெங்காயைத்தை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதன் சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் விடுங்கள், அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரையையும் உடைத்து அதனுள் ஊற்றுங்கள்.

நன்றாக கலந்த பின் உங்கள் தலையில் அந்த சாற்றை மசாஜ் செய்யுங்கள்.இரண்டு தொடக்கம் மூன்று நிமிடம் வரை மசாஜ் செய்துவிட்டு சற்று நேரம் இருங்கள் பின்பு ஷாம்பு அல்லது சீயாக்காய் போட்டு குளியுங்கள். வாரத்திற்கு மூன்று முறை செய்தால் போதும் வழுக்கை தலையில் முடி வளரும் மேஜிக்கை நீங்களே பார்ப்பீர்கள்..!