" "" "

இலங்கையில் இன்று முதல் தடை செய்யப் படும் சில சானிடைசர்கள். மக்களின் கவனத்திற்கு..!!

இன்று முதல் இலங்கையில் அரச பரிந்துரை அற்ற கை சுத்திகரிப்பன் ( Sanitizer) ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, மற்றும் பயன்படுத்துவதற்கு தடை செய்யப் பட்டுள்ளது. அதாவது NMRA ( தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை) வில் பதிவு செய்யப் படாத அனைத்து சானிடைர்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சானிடைசர்கள் பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் மருத்துவ பரிசோதனைகள் மூலம் மக்களுக்கு ஆபத்து இல்லாத சானிடைசர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போது சானிடைசரின் தேவையை பலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தும் சானிடைசர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் முகமாக அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானி இன்றைய தினம் வெளியிடப் பட்டுள்ளது.