" "" "

மணமேடையில் வைத்து மணமகன் சொன்ன ஒற்றை வார்த்தை, கழுத்தில் இருந்த 50 பவுண் நகையை தனது பெற்றோரிடம் கழட்டி கொடுத்த மணமகள்.! வெளியான காரணம்.!!

கேரளாவில் இளைஞர் ஒருவர் செய்த செயலை இந்தியாவில் உள்ள பெண்களை பெற்ற குடும்பத்தினர்கள் பாராட்டி வருகின்றனர். பெண் பிள்ளையை பெற்றுவிட்டோம், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என தவித்துக் கொண்டிருக்கும் பலர் எங்களுக்கு இப்படி ஒரு மருமகன் கிடைத்தால் போதும் என ஏங்கும் அளவிற்கு குறித்த இளைஞரின் செயல் இருந்துள்ளது. சரி அப்படி குறித்த இளைஞர் என்ன தான் செய்தார், ஏன் அனைவரும் அவரை கொண்டாடுகின்றார்கள்.?

தெரிந்துகொள்ளலாம் வாங்க. ஆலப்புழா மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ், நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கு பெற்றோர் திருமணம் பேசிய நிலையில் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகளான சுருதியுடன் நிச்சயதார்த்தமும் முடிந்தது. இந்த நிலையில் நேற்றைய திருமணத்தின் போது மேடைக்கு வந்த மணமகளிடம் மணமகன் என் கொள்கை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதாகும்,

நீ அதிகம் நகை போட்டுள்ளாய், தாலி கட்டிய அடுத்த நொடி நீ ரொம்ப பிடித்த செண்டிமெண்ட் நகை ஒன்றை தவிர மற்றைய அனைத்து நகையையும் பெற்றோரிடம் கொடுத்து விட வேண்டும் சம்மதமா என கேட்டுள்ளார். மணமகள் சம்மதம் சொல்ல தாலி கட்டிய அடுத்த நொடியே தாயின் பரம்பரை காப்பை மற்றும் வைத்துக் கொண்டு 50 பவுன் நகையை பெற்றோரிடம் கொடுத்துள்ளார் மணமகள்.

மணமகனின் பெற்றோர், மணமகன் என அனைவருமே வரதட்சணைக்கு எதிரானவர்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த செய்தி பரவி அனைத்து இந்திய மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.!