சிங்கப்பூரில் உச்ச நேரத்தில் பயன்படுத்த முடியாத கார்களின் எண்ணிக்கை 73% குறைந்தது..!!

சிங்கப்பூரில் உச்ச நேரத்தில் பயன்படுத்த அனுமதியளிக்கப்படாத (off peak)கார்களின் எண்ணிக்கை சுமார் 73 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த வருடம் ஜூலை மாத நிலவரப்படி கார்களின் எண்ணிக்கை 13,449ஆக இருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

2010ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 50,040 ஆகப் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. வாகனப் பகிர்வுச் சேவைகளை வழங்கும் Grab, Gojek ஆகிய நிறுவனங்களின் வருகையால் உச்ச வேளைகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாத கார்களின் பிரபலம் மங்க தொடங்கியுள்ளதாக போக்குவரத்து வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உச்ச வேளைகளில் செயற்படுத்த அனுமதி அளிக்கப்படாத (off peak)கார்கள், 1994-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர், கார்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு அந்தத் திட்டம் உதவுகின்றது.

மேலும் வீதிகளில் உச்ச வேளைகளில் கூடுதல் நெரிசலை ஏற்படுத்தாமல் இருக்கவும் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.