இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞன் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு…!!

கொல்கத்தாவின் Hooghly மாவட்டத்தைச் சேர்ந்த Srikanta Maity என்ற 30 வயதுடைய இளைஞன் தன்னுடைய சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையில் மொபைல் மூலம் சமூகவலைத்தளங்களில் நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்த உலகக்கோப்பை தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக் குறி எழுந்து கொண்ட போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் ரன் அவுட்டானார் இதை பார்த்த இளைஞனுக்கு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும் இதில் இறுதிக்கட்டத்தில் டோனியை கப்தில் அற்புதமாக ரன் அவுட் செய்ய, மூன்றாவது நடுவர் அவுட் என்று கொடுத்தவுடன் அதைக் கண்ட Srikanta Maity அந்த இடத்திலே மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருப்பவர்கள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னரே மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You might also like
error: Alert: Content is protected !!