இலங்கை ரூபா குறித்து வெளியான தகவல்!
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 9.4 சதவீத வீழ்ச்சியடைந்து 200 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகரித்ததன் படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 188.6 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் ரூபாவின் பெறுமதியானது 2.6 சதவீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.