" "" "

இறந்து மூன்று வருடங்களின் பின் புது வீடு திறப்புவிழாவில் கலந்துகொண்ட மனைவி ..! வைரலாகும் புகைப்படங்கள்…!!

மனைவி இறந்து மூன்று வருடங்களின் பின் புது வீடு திறப்பு விழாவில் மனைவியுடன் கலந்துகொண்ட கணவரின் அன்பு இந்திய மக்களை வியக்க வைத்துள்ளது. கர்நாடகவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் மூர்த்தி. தற்போது 57 வயதாகும் இவர் கல்லூரியில் படித்த போது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இரண்டு மகள்கள் குடும்பம் என மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திருப்பதி தரிசனத்திற்கு சென்று வரும் வழியில் விபத்து ஒன்றில் சிக்கி மூன்று வருடங்களுக்கு முன் மனைவி உயிரிழந்தார். கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீனிவாஸ் தனது கடின உழைப்பால் தொழிலதிபர் ஆனவர்.

மனைவியினால் தான் தன்னால் இந்த நிலையை அடைய முடிந்தது என நம்பிய ஸ்ரீனிவாஸிற்கு மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. திருமணமானதில் இருந்து பங்களா போன்றொரு பெரிய வீட்டினை கட்டி முடிக்க வேண்டும் என மனைவி கூறியதை மூன்று வருடங்களுக்குள் கட்டி முடித்தார் ஸ்ரீனிவாஸ்.

பிரமாண்டமான முறையில் வீட்டை கட்டி முடித்த ஸ்ரீனிவாஸ் குறித்த வீட்டில் மனைவியுடன் தான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதனால் மனைவியை போல் மெழுகு சிலை ஒன்றை செய்தார். அச்சு அசல் மனைவியின் சாயல் கொண்ட குறித்த மெழுகு சிலையை புதுவீட்டில் வைத்ததுடன் அவருடன் இருந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…!!