" "" "

பற்களில் மஞ்சள் கறை இருப்பதால் போகும் இடமெல்லாம் அவமான படுகின்றீர்களா.? அட கவலையை விடுங்க ஒருமுறை இதை செய்யுங்கள்.!!

சொத்தை பல், பல் வலி, மஞ்சள் கறை, இந்த தொல்லைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது தான் ஆனால் இது சாதாரண விடயமல்ல. வலி வந்தால் உயிரே போவது போல் இருக்கும், அதே போல் மஞ்சள் கறை என்பது பற்களை அசிங்கப் படுத்திவிடுவதோடு முக அழகையும் கெடுத்துவிடுகிறது.இதற்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இதற்கு தேவையான பொருட்கள்: வாழைப்பழ தோல், நல்லெண்ணை, உப்பு தூள், கராம்பு (லவங்கம்) பொடி. இவற்றை கொண்டு எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம்: முதலில் கராம்பு 3 எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் வாழைப்பழ தோலில் இருக்கும் மா போன்ற சதைகளை கரண்டியால் சுரண்டி கராம்பு பொடியுடன் சேர்க்கவும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பின் நல்லெண்ணை அரைக் கரண்டி மற்றும் உப்பு சிறிது சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இந்த கலவையுடன் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு டூத் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இவை அனைத்தும் பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை மிக்ஸ் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது பாதுகாப்பாக சாதாரணமாக கூட வைக்கலாம்.

இவற்றை பிரஷ் அல்லது விரலில் எடுத்து நன்றாக பற்களில் தேயுங்கள். சாதாரணமாக 3 நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும். பின் கழுவி விடுங்கள். தொடர்ந்து 5 நாட்கள் செய்தாலே போதுமானது. மஞ்சள் கறை முற்றிலும் நீங்கிவிடுவதுடன் பல் வலி, சொத்தைப் பல் தொல்லை முற்றிலும் இல்லாமல் போய்விடும்..!!