உங்கள் குழந்தைகள் வியர்குரு என்னும் வியர்வை பருக்களால் அவஸ்தை படுகின்றனரா ? இதோ இயற்கை முறையில் இலகுவான தீர்வு..! படித்து பகிருங்கள்…!!

பங்குனி வந்ததும் கூடவே வருகின்ற ஓர் தொல்லை தான் இந்த வியர்க்குரு. ஆனால் இப்போ பங்குனி இல்லாமல் இப்பவே கொழுத்துகின்ற வெய்யிலில் வியர்க்குருவின் தாக்கம் தெடங்கிடுச்சு. பெரியவர்கள் ஒருவாறாக வியர்க்குரு அரிப்பை ஏற்றுக்கொண்டு சமாளித்தாலும் சிறிசுகளைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. வியர்க்குரு தாக்கத்தால் சினந்து கொண்டே இருப்பார்கள்.இதற்கு இருக்கிறது இயற்கையான தீர்வுகள்,

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யல வேண்டும்.

சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், வியர்க்குரு விரைவில் மறைந்திடுமாம்.வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தலாம்.

அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது. இதுவும் வியர்க்குரு தோன்றுவதற்கு காரணமாகின்றதாம்.

பொதுவாக கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.