அசுர வேகத்தில் ஓடி ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துக் கொண்ட ரஷ்யா..!!
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி ரஷ்யா 2ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில தினங்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசர பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு நேற்றைய தினம் கணக்கீட்டின் படி, 9, 700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 600ஐக் தூண்டியுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை தொடர்ந்து உயர்ந்தால் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.