கிரிபதியில் படகு கவிழ்ந்து 95 பேர் பலி…!!!

பசிபிக் நாடான கிரிபதி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த படகு விபத்தில் 95 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த படகில் 102 பயணிகள் பயணித்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இருப்பினும் இரண்டு பணியாளர்கள் உட்பட 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளனர். அதிக பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தின் போது படகு செலுத்துனர் மது அருந்தியிருந்ததாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றனர்.
இந்த படகு கவிழ்வதற்கு முன்னர் சமிஞ்சை எழுப்பபட்டபோதும் படகு செலுத்துனர் பொருட்படுத்தவில்லை என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றது.