தெஹிவளையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய அப்துல் லதீப்பின் ஆஸ்திரேலியாவுடனான அதிர வைக்கும் தொடர்பு!!
21ம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டகளப்பு, போன்ற இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருகின்றது. இந்த நிலையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்த சென்று அங்கு குண்டு வெடிக்காததால் திரும்பி வந்து தெஹிவளையில் வைத்து குண்டை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது தற்கொலையாளி உட்பட இருவர் மரணமடைந்தனர்.
இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இவரது பெயர் அப்துல் லதீப் ஜமீல் மொஹமெட் எனவும் இவர் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் 2009ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரை உயர் கல்வி கற்றுள்ளார் அத்துடன் அங்கு இவரது செயற்பாடுகள் சந்தேகத்தை கொடுத்ததால் பலமுறை பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்பதையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி இங்கிலாந்து சென்று அங்கும் படித்திருகின்றார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஆஸ்திரேலியா சென்று வந்த பின் முற்றிலும் வித்தியாசமாக நடந்துகொண்டதாக இவரது சகோதரி கூறியுள்ளதும் குறிப்பிட தக்கதாகும்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”